சித்திரைத் திருவிழா 2017

வசந்த கால காற்று வருடத்தொடங்கிய நேரம் அது.. இந்நகரம் பூப்பெய்தியதைப் போல, புதிதாக மலர்விட்ட செர்ரி மரங்கள் நாணத்தைப்  பூசிக்கொண்டு இளம்சிவப்பில் காட்சியளித்தன. இப்படியானதொரு வேளையில், சியாட்டில் மக்களுக்கு தமிழகத்தின் உணவு மரபை நினைவூட்டும் விதமாக, முதல் முறையாக, “வாழை இலை விருந்து” திருவிழாவை 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்தோம்.

திருவிழா என்றாலே மக்கள் கூட்டமும், விளையாட்டு மற்றும் விருந்தும் தானே முதலில் நினைவுக்கு வரும். ஆம்! அப்படிப்பட்டதாகவே இந்த நிகழ்ச்சியும் அமைந்தது. வாழை இலை விருந்தில் தொடங்கி, குழந்தைகளுக்கான கேளிக்கை விஷயங்கள், விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய உணவு வகைகள், உடை மற்றும் அணிகலன்கள் அடங்கிய கடைகள் என திருவிழா அமர்களப்பட்டது. ஏப்ரல் 22, சனிக்கிழமை, 11 மணி முதல் 4 மணி வரை, Redmond High school வளாகத்தில்  திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது எங்கள் எதிர்பார்ப்பை மீறிய பாராட்டையும் மகத்தான வரவேற்பையும் மக்களிடையே பெற்றது. இவ்விழாவின் மூலம் திரட்டப்பட்ட நிதியை தமிழ் ஆர்வலர்கள் கொடுத்த நன்கொடையுடன் இணைத்து $10,000-தை தமிழ் வளர்க்க ஹார்வார்ட் பல்கலை கழகத்தின் தமிழ் இருக்கை அமைய அர்பணிக்கப்பட்டது.

Leave A Comment