பந்தல் 2017

சியாட்டில் வாழ் மக்கள் சூரிய கதிர்களை வரவேற்று, கூட்டம் கூட்டமாக வெளி இடங்களுக்கு பயணப்படும் தருணமிது. சூரியனின் பொன்னிற ஒளி, தங்கத்திற்கு இணையாக ஜொலித்தது.  இப்படியானதொரு வேளையில் நமது சியாட்டில் தமிழ்ச் சங்கம் கோடைக்காலக்  கொண்டாட்டமான “பந்தல்  2017” நிகழ்ச்சியை ஆகஸ்ட் 19, காலை 7 மணி முதல் Perrigo பூங்காவில் புத்துணர்வுடன் நடத்தியது.

இந்நிகழ்ச்சியின் அங்கமாக பெரியோர் மற்றும் சிறியவர்கள்,  தனிநபர்  மற்றும்  குழு  போட்டிகளிலும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.  இதில் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், கபடி, பம்பரம் மற்றும் கோக்கோ, கேரம், செஸ், டென்னிஸ், இறகுப் பந்து, ரிங்பால் உள்ளிட்ட விளையாட்டுகளை  விளையாடி மகிழ்ந்தனர். குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் வடிவமைக்கப்பட்டன. அவர்கள் காய்கறி-கனி வகைகள் கொண்டு கலை உருவங்களை செதுக்குதல் போட்டிகளிலும் பங்குகொண்டனர்.

சிறப்பு நிகழ்ச்சியான கைப்பந்து போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் வெற்றிப்பெற்ற அணிக்கு, “டாக்டர் APJ அப்துல் கலாம் நினைவு  சூழல் கோப்பை” வழங்கப்பட்டது.

Leave A Comment