பொங்கல் விழா 2017

எப்பொழுதும் புது வருடம் என்பது நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது. கண்டிப்பாக சாதித்து விடலாம் என்ற வேட்கையை அதிகரிக்கிறது. இப்புது வருடத்தின் முதல் மாதமான ஜனவரியில் நமது சியாட்டில் தமிழ்ச் சங்கம் “பொங்கல் கொண்டாட்டம் 2017” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

வாங்க பழகலாம் புகழ் திரு S. ராஜா தலைமையில் சியாட்டில் பேச்சாளர்கள் பங்கு பெறும் பட்டிமன்றத்தோடு கூடிய ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. விழாவானது, ஜனவரி 29, மாலை 4-8 மணி அளவில் New Port High School PAC அரங்கத்தில் நடைபெற்றது.

பட்டிமன்றத்தில், “இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால்  சாதகமா? பாதகமா?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. திரு ராஜா அவர்கள் கலகலப்பான நீதிபதியாக இருந்து, நம் சியாட்டில் பேச்சாளர்களை ஊக்குவித்து, விழாவினை சிறப்பித்தார். நம்மக்களின் செவிக்கு விருந்தாய் இந்நிகழ்வு அமைந்தது. கலை நிகழ்ச்சிகளை  மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Leave A Comment