பொங்கல் விழா 2018

புது வருடம், புதிய பாதையில் பயணப்பட ஒரு நம்பிக்கையை விதைக்கிறது. கொண்டாட்டமான நாட்களை நமக்கு பரிசளிக்கும் என்று எதிர்பார்க்கச் செய்கிறது! இந்த ஆண்டின் முதல் நிகழ்வான பொங்கல் விழாவினை, நமது சங்கம், ஜனவரி 27, மாலை 4-8 மணி அளவில் Kane Hall-ல், சுவையான பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சிகளுடன் நடத்தியது.

 

திரைக்கதைச் சக்கரவர்த்தி திரு. கே. பாக்யராஜ் தலைமையில், “கல்யாண வாழ்க்கையில் சுதந்திரம் இழந்தவர்கள் ஆண்களே/ பெண்களே!” என்ற தலைப்பில் நகைச்சுவை விவாதத்தை, நடுவராக இருந்து நடத்திக் கொடுத்ததோடு மட்டுமின்றி, நமது பேச்சாளர்களையும் நன்கு ஊக்குவித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். இந்நிகழ்வில், பூர்ணிமா பாக்யராஜ் அவர்களும் உடனிருந்து தம் வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

Leave A Comment