சித்திரைத் திருவிழா 2018

சியாட்டில் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாமாண்டு வாழையிலை விருந்து சனிக்கிழமை ஏப்ரல் 7-ம் தேதி ரெட்மன்ட் உயர்நிலை பள்ளியில்  வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியினை சங்க அலுவலர்கள் நன்றாக வடிவமைத்து சிறப்பாக  நடத்தினர்.

விருந்தில் பல்சுவை உணவு வகைகள் 16ம் நீண்ட பசுமையான வாழை இலையில் பரிமாறப்பட்டது மிகச் சிறப்பு. மீண்டும் மீண்டும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. வந்திருந்த விருந்தினர்களும், பெரியோர்களும், இளம் வயதினரும், குழந்தைகளும் ரசித்தும் ருசித்தும் விருந்தினை அகமகிழ்ந்து சுவைத்தனர், வாழ்த்தினர்.

அதே அரங்கத்தில் பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் நடந்தேறியது. மேலும் பலவிதமான அங்காடிகள் பொருட்களை விற்றனர். துணி வகைகள், சமையல் பொருள்கள், அலங்கார பொருள்களும் வந்தோரை அசத்தியதுடன்  கூடுதல்  வரவேற்பும் பெற்றது.

குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பெரும் திரளாக வந்திருந்த அனைவரும் தமிழ்நாட்டில் நடைபெறும் பெருவிழா போன்றதோர்  அனுபவமும், உணர்வும், நெகிழ்ச்சியும் அடைந்தனர் என்றால் மிகையாகாது.

பல தன்னார்வ தொண்டர்களும் சிரமம் பாராமல் உணவுகளை பரிமாறியும், சுத்தம் செய்தும் உதவினார்கள். வந்திருந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Annual Sponsors

       

 

Event Sponsors

       

Leave A Comment