recent events

28
Oct

பட்டாசு 2017

இருள் விலக்கி ஒளி ஏற்ற வரும் தீப திருநாளாம் தீபாவளியை ஒட்டி சியாட்டில் தமிழ்ச் சங்கம்  “பட்டாசு 2017” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 28-ம் தேதியன்று Kirkland Performance Arts Center (KPAC) அரங்கத்தில் மாலை 4 மணி முதல் 8  மணி  வரை  கோலாகலமான நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டது. சியாட்டில் பெருநகர் பகுதி வாழ் தமிழ் நெஞ்சங்கள் பலரும் தங்களின் திறமையை  வெளிக்காட்டும் விதமாக பாட்டு நடன நிகழ்ச்சிகள் மற்றும் குறும் பட போட்டியும்  அரங்கேறியது. STAR கலை குழுவின் பறை மற்றும் பல கிராமிய கலை  நிகழ்ச்சிகள்

Read more

19
Aug

பந்தல் 2017

சியாட்டில் வாழ் மக்கள் சூரிய கதிர்களை வரவேற்று, கூட்டம் கூட்டமாக வெளி இடங்களுக்கு பயணப்படும் தருணமிது. சூரியனின் பொன்னிற ஒளி, தங்கத்திற்கு இணையாக ஜொலித்தது.  இப்படியானதொரு வேளையில் நமது சியாட்டில் தமிழ்ச் சங்கம் கோடைக்காலக்  கொண்டாட்டமான “பந்தல்  2017” நிகழ்ச்சியை ஆகஸ்ட் 19, காலை 7 மணி முதல் Perrigo பூங்காவில் புத்துணர்வுடன் நடத்தியது. இந்நிகழ்ச்சியின் அங்கமாக பெரியோர் மற்றும் சிறியவர்கள்,  தனிநபர்  மற்றும்  குழு  போட்டிகளிலும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.  இதில் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், கபடி, பம்பரம் மற்றும் கோக்கோ, கேரம், செஸ், டென்னிஸ், இறகுப் பந்து, ரிங்பால் உள்ளிட்ட

Read more

22
Apr

சித்திரைத் திருவிழா 2017

வசந்த கால காற்று வருடத்தொடங்கிய நேரம் அது.. இந்நகரம் பூப்பெய்தியதைப் போல, புதிதாக மலர்விட்ட செர்ரி மரங்கள் நாணத்தைப்  பூசிக்கொண்டு இளம்சிவப்பில் காட்சியளித்தன. இப்படியானதொரு வேளையில், சியாட்டில் மக்களுக்கு தமிழகத்தின் உணவு மரபை நினைவூட்டும் விதமாக, முதல் முறையாக, “வாழை இலை விருந்து” திருவிழாவை 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்தோம். திருவிழா என்றாலே மக்கள் கூட்டமும், விளையாட்டு மற்றும் விருந்தும் தானே முதலில் நினைவுக்கு வரும். ஆம்! அப்படிப்பட்டதாகவே இந்த நிகழ்ச்சியும் அமைந்தது. வாழை இலை விருந்தில் தொடங்கி, குழந்தைகளுக்கான கேளிக்கை விஷயங்கள், விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய உணவு வகைகள்,

Read more

29
Jan

பொங்கல் விழா 2017

எப்பொழுதும் புது வருடம் என்பது நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது. கண்டிப்பாக சாதித்து விடலாம் என்ற வேட்கையை அதிகரிக்கிறது. இப்புது வருடத்தின் முதல் மாதமான ஜனவரியில் நமது சியாட்டில் தமிழ்ச் சங்கம் “பொங்கல் கொண்டாட்டம் 2017” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. வாங்க பழகலாம் புகழ் திரு S. ராஜா தலைமையில் சியாட்டில் பேச்சாளர்கள் பங்கு பெறும் பட்டிமன்றத்தோடு கூடிய ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. விழாவானது, ஜனவரி 29, மாலை 4-8 மணி அளவில் New Port High School PAC அரங்கத்தில் நடைபெற்றது. பட்டிமன்றத்தில், “இன்றைய அறிவியல்

Read more